Thursday, February 19, 2009

Vaaranam Aayiram 2008




Singers::Clinton Cerejo, S.P.B.Charan
Composer::Harris Jayaraj
Lyrics::Thamarai

Nee Indri Naanum Illai
En Kaathal Poiyum Illai
Vazhi Engum Unthan Mugamthaan
Vali Kooda Ingae Sugamthaan

Thodu Vaanam Sivanthu Poagum
Tholai Thooram Kurainthu Poagum
Karaigindra Nodigalil, Naan Nerungi Vanthaenae

Ini Unnai Piriya Maataen
Thuli Thooram Nagara Maataen
Mugam Paarkath Thavikiraen, En Iniya Poongatrae..

Oh Shanthi Shanthi Oh Shanthi
En Uyirai Uyirai Nee Aaenthi
Aaen Sendraai Sendraai Ennai Neengi
Naan Vandaen Vandaen Unnai Thaedi.. Oaah..

Nee Indri Naanum Illai
En Kaathal Poiyum Illai
Unnai Kaanum Naeram Varuma??
En Kangal Moatcham Peruma??

Viralodu Vizhiyum Vaadum
Viraigindra Kaalum Noagum
Irunthaalum Varugiraen,
Un Madiyil Naan Thoonga..

Ènnai Vanthu Urasum Kaatrae,
Aavalødu Kanavil Naetrae,
Kaikøarthu Nerunginaen,
Kan Aadithu Nee Aenga..

Oh Šhanthi Šhanthi Oh Šhanthi
Èn Uyirai Uyirai Nee Aaenthi
Aaen Šendraai Šendraai Ènnai Neengi
Naan Vandaen Vandaen Unnai Thaedi..

Oh Šhanthi Šhanthi Oh Šhanthi
Èn Uyirai Uyirai Nee Aaenthi
Aaen Šendraai Šendraai Ènnai Neengi
Naan Vandaen Vandaen Unnai Thaedi..

————————————————————————-

நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
வழி எங்கும் உந்தன் முகம்தான்
வலி கூட இங்கே சுகம்தான்

தொடுவானம் சிவந்து போகும்
தொலை தூரம் குறைந்து போகும்
கரைகின்ற நொடிகளில் நான் நெருங்கி வந்தேனே

இனி உன்னை பிரிய மாட்டேன்
துளி தூரம் நகர மாட்டேன்
முகம் பார்க்கத் தவிக்கிறேன், என் இனிய பூங்காற்றே..

ஒ சாந்தி சாந்தி ஒ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் என்னை நீங்கி
நான் வந்தேன் வந்தேன் உன்னை தேடி.. ஒ..

நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
உன்னை காணும் நேரம் வருமா??
என் கண்கள் மோட்சம் பெறுமா??

விரலோடு விழியும் வாடும்
விரைகின்ற காலும் நோகும்
இருந்தாலும் வருகிறேன்,
உன் மடியில் நான் தூங்க..

என்னை வந்து உரசும் காற்றே,
ஆவலோடு கனவில் நேற்றே,
கைகோர்த்து நெருங்கினேன்,
கண் அடித்து நீ ஏங்க..

ஒ சாந்தி சாந்தி ஒ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் என்னை நீங்கி
நான் வந்தேன் வந்தேன் உன்னை தேடி.. ஒ..

(ஒ சாந்தி சாந்தி ஒ சாந்தி..)

No comments: